ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

'உங்களால் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது': பாஜகவை விளாசிய ராகுல்

​பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் பேசியுள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 3:32 pm

DIN


பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் பேசியுள்ளார்.

மக்களவையில் அவர் பேசியதாவது:

"இந்தியாவுக்கு இரண்டு பார்வைகள் உள்ளன. முதலாவது மாநிலங்களின் ஒன்றியம். அதன் அர்த்தம், பரஸ்பர பேச்சுவார்த்தை. தமிழ்நாட்டு சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்பேன். இதுதான் வேண்டும் என அவர் கேட்பார். பதிலுக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என அவர் என்னிடம் கேட்பார். இதுதான் வேண்டும் என நான் பதிலுக்குக் கேட்பேன். இதற்குப் பெயர் கூட்டாட்சி. இதுவொன்றும் மன்னராட்சி கிடையாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது.

இந்திய வரலாற்றில் எந்தவொரு பேரரசை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே மாநிலங்களை ஆள முடிந்துள்ளது.

மொழிகள், கலாசாரங்கள் மற்றும் வரலாறுகளை ஒடுக்கிவிடலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களுக்கு வரலாறு குறித்த புரிதல் கிடையாது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து உங்களுக்குப் புரிதல் கிடையாது. 

தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளுணர்வில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழி குறித்த புரிதல் உள்ளது. அதேசமயம் இந்தியா குறித்த புரிதலும் அவர்களிடம் உள்ளது."

இதன்பிறகு, மக்களவையில் தமிழ்நாடு குறித்து அதிகளவில் பேசியது தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர் தான் ஒரு தமிழன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.