மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை: மாநிலங்களவையில் திமுக எம்.பி. பேச்சு

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார். 

News image
திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி
Updated On :3 பிப்ரவரி 2022, 8:34 am

DIN

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார். 

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, 'மத்திய அரசு, கரோனா காலத்தில் மக்களைக் காக்கத் தவறிவிட்டது.தில்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பல கிமீ தூரம் வரை நடந்தார்கள். ஒரு பெண் தனது குழந்தையுடன் உணவின்றி பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் காட்சியைப் பார்த்திருப்போம். அப்போது மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? 

முதல் கரோனா அலையில் இருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை. அடுத்தடுத்த அலைகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அளவில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை; நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை' என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.