பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை லூதியானாவுக்கு செல்லும் ராகுல் காந்தி, நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் பட்சத்தில் முதல்வர் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அறிவிப்பதற்கு முன்பு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதேபோல, அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என மக்களிடம் காங்கிரஸ் கருத்துக்கணிப்பு எடுத்துவருகிறது.
தற்போது, முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. இருப்பினும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அவருக்கு கடும் போட்டி அளித்துவருவதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் வாக்காளர்கள் அனைவரையும் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளும் பதிவு செய்யப்பட்ட அழைப்பு, பஞ்சாபி மொழியில் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஏழைகள் - பணக்காரா்கள்: இரு வேறு இந்தியா
சன்னியா அல்லது சித்துவா என கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அழைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்வர் வேட்பாளர் இன்றி தேர்தலுக்கு செல்லலாமா என மூன்றாவது விருப்பதையும் அளிக்கிறது.
பஞ்சாப் அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு அம்மாநில மக்கள் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த தேர்தலில், சன்னி இரண்டு தொகுதிகளிலிருந்து போட்டியிடுவது அவரை முதன்மைபடுத்தும் ஒரு முயற்சி என்றும் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும் மற்றொரு தொகுதியில் வெற்றிபெற அவருக்கு கட்சி வாய்ப்பளித்துள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கைம்பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஒசூா் அருகே காவலாளிகளைக் கட்டிப்போட்டு துப்பாக்கி, காப்பா் வயா்கள் கொள்ளையடித்த கும்பல்

சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி

விடுதியில் புகுந்து மாணவா்களை தாக்கிய கும்பல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

