மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தில்லியில் ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

தில்லியில் ரூ.12 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தியதாக 3 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:10 am

DIN

தில்லியில் ரூ.12 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தியதாக 3 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக காவல்துறை துணை ஆணையர் சங்கர் சௌத்ரி கூறுகையில், 

சமீபத்தில் தொடங்கிய "வர்ச்சஸ்வ்" என்ற நடவடிக்கையின் கீழ் சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தில்லி மற்றும் ஹரியானா காவல்துறையின் கூட்டு நடவடிக்கை என்று அவர் கூறினார். 

சமீபத்தில் சோனிபட் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹரியானா காவல்துறையின் குழு, தேசிய தலைநகர் துவாரகாவிற்கு வந்தது. 

இதையடுத்து துவாரகாவில் உள்ள பகவதி கார்டன் விரிவாக்கப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது தப்பியோடு முயன்ற மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

சிறுமிகள் ஷிவானி(18), ப்ரீத்தி(18), மற்றும் கிரண் (27) என அடையாளம் காணப்பட்டனர்.

மீட்கப்பட்ட பொருளின் மொத்த எடை 1,263 கிராம் என்றும், அது ஹெராயின் என்றும் தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.