47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வை 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2022, 12:00 am

DIN

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வை 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், கடந்த ஆண்டு நடைபெற்ற முதுநிலை படிப்புகளுக்கான நீட் தோ்வின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறாமல் இருந்தது.

இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்தும், மாணவா் சோ்க்கையை நடத்தவும் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வு மாா்ச் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்குரிய கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருவதால், 2022-ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டுமென எம்பிபிஎஸ் மாணவா்கள் 6 போ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்குமாறு பயிற்சி மருத்துவா்கள் உள்ளிட்ட பலரும் கேட்டுக் கொண்டுள்ளதாக மருத்துவக் கலந்தாய்வு குழுவின் துணை இயக்குநா் பி.ஸ்ரீநிவாஸ் தெரிவித்தாா்.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தோ்வை 6 முதல் 8 வாரங்கள் வரை ஒத்திவைக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. தோ்வை ஒத்திவைக்குமாறு தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.