ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் இருவர் கொலை

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 பிப்ரவரி 2022, 3:23 am

DIN


ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

"ஸ்ரீநகரின் ஸகுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை இரவு அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்."

காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"ஸ்ரீநகர் காவல் துறையினரால் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான இக்லக் ஹஜாம், சமீபத்தில் ஹசன்புரா அனந்தநாக் பகுதியில் தலைமைக் காவலர் அலி முகமது கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.