பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும், அக்கட்சியின் ஆணவம் குறையவில்லை என்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மக்களவையில் இன்று, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்தும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.
அப்போது, தமிழகத்தில் பாஜக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது என ராகுல் காந்தி கூறியிருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடி பேசினார்.
பிரதமர் மோடி பேசியதாவது, 1962-க்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை. பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை ஆளும்கட்சியாக்க மக்களே விரும்பவில்லை. ஆட்சி போனாலும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் போகவில்லை.
கரோனா என்பது உலக பேரிடர். ஆனால், அதனை அரசியல் கட்சி பிரிவினைக்குப் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ் கட்சி, முதல் கரோனா அலையின்போது, அனைத்து எல்லைகளையும் தாண்டி அரசியல் செய்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப தூண்டிவிட்டது காங்கிரஸ் கட்சிதான்.
மக்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துள்ளார்கள் என்று அந்தக்கட்சி சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
இந்திய மக்கள், ஜனநாயகத்தின் மீது பல நூற்றாண்டு காலமாக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். ஆனால், கண்பார்வையற்ற எதிர்க்கட்சியோ, ஜனநாயகத்தை அவமரியாதை செய்துவிட்டது.
கரோனா தொற்றுக்குப் பின்னர் நிலைமை சீராகி வரும் நிலையில், உலக நாடுகள் மிகவும் வேகமாக புதிய உலகை நோக்கி முன்னேறி வருகின்றன. இந்த நல்வாய்ப்பை இந்தியா ஒருபோதும் இழந்துவிடாது என்றும் மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆர் நடவடிக்கையால் எனக்கு 10,000 வாக்குகள் இழப்பு! - கேரள முன்னாள் முதல்வரின் மகன் பேச்சு!

ம.பி.யில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்!

ஆடியோ வெளியானபிறகு ஆ. ராசா வெளியே வரவில்லை! அண்ணாமலை | BJP | DMK

பலரது வியர்வைக்குத் துரோகம் செய்யாதீர்கள்..! ஜன நாயகன் குறித்து ஜீவா!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


