சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மத்திய பிரதேச முதல்வருக்குமீண்டும் கரோனா பாதிப்பு

மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹானுக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

News image
கோப்புப்படம்
Updated On :15 பிப்ரவரி 2022, 7:11 pm

DIN

மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹானுக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இது தொடா்பாக சௌஹான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று உறுதியானதையடுத்து மருத்துவா்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தலில் உள்ளேன். எனது அலுவலகப் பணிகளை இணையவழியில் மேற்கொள்ள இருக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

இதற்கு முன்பு கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா முதல் அலையின்போதும் சௌஹானுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

மத்திய பிரதேசத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததையடுத்து, கடந்த வாரம்தான் பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.