மணிப்பூர் பேரவைத் தேர்தல்: பிப்.21-ல் ராகுல் காந்தி பிரசாரம்

மணிப்பூரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிப்ரவரி 21-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். 
மணிப்பூர் பேரவைத் தேர்தல்: பிப்.21-ல் ராகுல் காந்தி பிரசாரம்
Updated on
1 min read


மணிப்பூரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிப்ரவரி 21-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். 

மணிப்பூரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 28-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் மாா்ச் 5-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

முன்னதாக, முதல் கட்டத் தோ்தல் பிப். 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் மாா்ச் 3-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு கள நிலவரங்களை கருத்தில் கொண்டு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. 

இந்நிலையில் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரங்கள் தீவிமடைந்து வருகின்றன. அந்தவகையில் மணிப்பூரில் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். 

உத்தரகண்ட் மாநிலத்தின் 70 தொகுதிகளுக்கும், கோவாவின் 40 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com