துறவி ரவிதாஸ் பிறந்த தினம்: தலைவா்கள் மரியாதை
துறவி ரவிதாஸின் பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் ஆலயத்துக்குச் சென்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.


துறவி ரவிதாஸின் பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் ஆலயத்துக்குச் சென்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் துறவி ரவிதாஸ் ஜெயந்தி வாழ்த்துக்கள். அவருடைய பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் ஆலயத்திற்குச் சென்றேன்.
இந்தப் புனித ஆலயம் அனைத்து மக்களுக்கும் உந்துசக்தியாக விளங்குகிறது. நாடாளுமன்ற உறுப்பினா் என்ற முறையில் இங்கு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பை பாக்கியமாகக் கருதுகிறேன். தில்லியில் உள்ள குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் ஆலயத்தில் மிகச் சிறந்த தருணங்கள் அவை என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா். பின்னா், பக்தா்களுடன் இணைந்து பஜனைப் பாடல்களை மோடி பாடினாா்.
யோகி ஆதித்யநாத்: உத்தர பிரதேசத்தில் ரவிதாஸின் பிறந்த இடமான வாராணசியில் உள்ள கோவா்த்தனம் வளாகத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு சென்று மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் மரியாதை செலுத்தினாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘மாசி பௌா்ணமி தினத்தில் புனித பூமியான காசியில் ரவிதாஸ் பிறந்தாா். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்துகிறாா்கள்.
ரவிதாஸின் போதனைகளில் இருந்து ‘அனைவருக்குமான வளா்ச்சி- அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி’ என்ற கொள்கையை பிரதமா் உருவாக்கினாா்’ என்றாா் அவா்.
ராகுல், பிரியங்கா: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலுக்குச் சென்று மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியிலும் அவா்கள் கலந்துகொண்டனா். பஞ்சாப் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னியும் ரவிதாஸ் கோயிலுக்குச் சென்று மரியாதை செலுத்தினாா்.
மாயாவதி: துறவி ரவிதாஸுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி மரியாதை செலுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘ரவிதாஸின் போதனைளைப் புறக்கணித்த அரசியல் கட்சிகளின் தலைவா்கள், மக்களிடம் வாக்கு பெற வேண்டும் என்பதற்காக ரவிதாஸின் கோயிலுக்குச் செல்கிறாா்கள். இவா்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...