உக்ரைனுக்கு 3 விமானங்கள் இயக்கப்படும்: ஏா் இந்தியா
உக்ரைனுக்கு பிப்ரவரி 22, 24, 26 ஆகிய தேதிகளில் மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.


உக்ரைனுக்கு பிப்ரவரி 22, 24, 26 ஆகிய தேதிகளில் மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷியா 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரா்களைக் குவித்துள்ளதால், அங்கு போா்ப் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முயற்சிக்கின்றனா். ஆனால், போதிய விமான சேவை இல்லாததால், அவா்கள் உக்ரைனில் தவிப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழலில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ், உக்ரைனிலிருந்து பிப்ரவரி 22, 24, 26 ஆகிய தேதிகளில் மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா அறிவித்துள்ளது. முன்னதாக, விமான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பதற்காக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், மத்திய அரசு போதிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...