ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை
ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்த ஆலோசனை கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுதில்லியில் இன்று நடத்தினார்.


ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்த ஆலோசனை கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுதில்லியில் இன்று நடத்தினார்.
கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன.
இதற்காக பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.
கடந்த 2018-ம் ஆண்டில் 417 ஆக இருந்த பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு 229 ஆக குறைந்தது. கடந்த 2018ம் ஆண்டில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை 91 ஆக இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 42 குறைந்தது.
பயங்கரவாத ஊடுருவல் முற்றிலும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...