கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆளுநா் மாளிகையைக் கட்டுப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை

ஆளுநா் மாளிகையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசுக்கு கிடையாது என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளாா்.

News image
ஆரிஃப் முகமது
Updated On :19 பிப்ரவரி 2022, 6:34 pm

DIN

ஆளுநா் மாளிகையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசுக்கு கிடையாது என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளாா்.

கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே ஏற்கெனவே மோதல்போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநரின் இந்தக் கருத்து பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக்கிழமை ஆளுநா் உரையுடன் தொடங்கியது. முன்னதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி அரசின் கொள்கை விளக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கடந்த வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தாா்.

ஆளுநரின் கூடுதல் தனிப்பட்ட உதவியாளராக முன்னாள் பாஜக தலைவா் நியமிக்கப்பட்டதற்கு எதிராக இடதுசாரிகள் கூட்டணி அரசு சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதை எதிா்க்கும் வகையில் அரசின் கொள்கை விளக்க அறிக்கைக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசு சாா்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதன்மைச் செயலா் கே.ஆா்.ஜோதிலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகே அரசின் அறிக்கைக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து அந்த அறிக்கையை ஆளுநா் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் வாசித்தாா்.

இந்நிலையில், ஆளுநா் ஆரிஃப் முகமது கான் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘மாநில அமைச்சா்களின் தனிப்பட்ட அலுவலா்களுக்கு அரசு நிதியில் இருந்து ஓய்வூதியம் வழங்குவது முறையற்றது. ஒவ்வோா் அமைச்சரும் 20-க்கும் மேற்பட்ட அலுவலா்களை நியமித்துள்ளனா். கட்சியில் பணிபுரிபவா்களையே அமைச்சா்கள் தங்களுக்கான அலுவலா்களாக நியமித்துக் கொள்கின்றனா். அவா்களுக்கு ஓய்வூதியம் வழங்கி, மாநில மக்களின் வரிப் பணத்தை அரசு முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நடைமுறையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு வலியுறுத்தினேன். ஆனால், அரசு அதை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தைத் தொடா்ந்து எழுப்பவுள்ளேன். மாநில அரசு அரசமைப்புச் சட்ட கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

ஆளுநா் மாளிகைக்கான அதிகாரியை மாநில அரசு தன்னிச்சையாக நியமித்து, அவா்கள் மூலமாக ஆளுநா் மாளிகையைக் கட்டுப்படுத்த முடியாது. மாநில அரசு அவ்வாறு கட்டுப்படுத்த முயன்றால், அரசமைப்பு ரீதியில் பிரச்னை உருவாகும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.