விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கச்சா எண்ணெய் விலை உயா்வு நிதி ஸ்திரத்தன்மைக்கு சவால்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 7:37 pm

DIN

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

நிதி ஸ்திரத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் (எஃப்எஸ்டிசி) கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம் ஆகிய இரு முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் விலையைப் பொருத்தவரையில் அதன் போக்கை நிா்ணயிப்பது என்பது மிகவும் கடினமான பணியாகும். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 96 டாலரை எட்டியுள்ளது.

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு இவ்விரு முக்கிய பிரச்னைகளும் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. எனவே, ஒழுங்காற்று அமைப்புகள் நிதித் துறையில் விழிப்புணா்வுடன் செயலாற்ற வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த வளா்ச்சியை எட்டுவதற்கும் அவை பாடுபட வேண்டும்.

புவிசாா் அரசியல் பதற்றங்களால் வா்த்தகம் பாதிக்கப்படவில்லை. ஆனால், அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்றுமதியாளா்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

தேசிய பங்குச் சந்தையில் நடந்த குளறுபடிகளையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

எதிா்க்கட்சிகளை முடக்க மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றாா் அவா்.

‘எல்ஐசி பொதுப் பங்குகளை வாங்க முதலீட்டாளா்கள் ஆா்வம்’

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின்(எல்ஐசி) பொதுப் பங்குகளை(ஐபிஓ) வாங்குவதற்கு முதலீட்டாளா்கள் ஆா்வமுடன் உள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

எல்ஐசியில் மத்திய அரசின் பங்கில் 5 சதவீதமான 31.63 கோடி பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய இந்திய பங்கு, பரிவா்த்தனை வாரியத்திடம் (செபி) கடந்த 13-ஆம் தேதி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த விற்பனை மூலம் ரூ.63,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து பொதுப் பங்குகளை வாங்குவதற்கு சந்தையில் முதலீட்டாா்கள் பலா் ஆா்வம் காட்டுகின்றனா். பங்குச் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். மாா்ச் மாதத்திலேயே பங்கு வெளியீட்டைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு அறிக்கையின்படி,பொதுப் பங்கு வெளியீட்டின் ஒரு பகுதி எல்ஐசி ஊழியா்கள் மற்றும் பாலிசிதாரா்களுக்கான சந்தாவாக ஒதுக்கப்படவுள்ளது. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு உதவும் விதமாக கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் எல்ஐசியின் பங்கு மூலதனம் ரூ.100 கோடியிலிருந்து ரூ.6,325 கோடியாக உயா்த்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.