பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஹிஜாப் வழக்கு: நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் கைது

கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அதை விசா

News image

நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா

Updated On :28 பிப்ரவரி 2022, 11:43 am

கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அதை விசாரிக்கும் நீதிபதியை விமர்சித்ததாக நடிகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடகத்தில் மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணியக் கூடாது என பெரும் சர்ச்சை வெடித்த நிலையில் அதனை வழக்காக எடுத்து அம்மாநில உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி கிருஷ்ணா தீக்‌ஷித்-க்கு எதிராக கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா தன் டிவிட்டர் பக்கத்தில் ‘பாலியல் வன்கொடுமை வழக்கில் மோசமானத் தீர்ப்பை வழங்கியவர் ஹிஜாப் வழக்கை விசாரிக்கிறார்’ எனப் பதிவிட்டிருந்தார்.

இதன் காரணமாக நேற்று(பிப்.22) அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.