
முதலீட்டு நிறுவனத்தின் பணத்தை திரும்ப அளிக்கவில்லை என்று கூறி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக 2012-இல் பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை கேரள கேரள உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
கேரளத்தில் செயல்பட்டு வந்த தனியாா் நிறுவனத்தில் சுப்பிரமணியன் சுவாமி 1986-இல் தலைவா் பதவி வகித்துள்ளாா். அந்த நிறுவனம் மூடப்பட்டதால் அதில் முதலீடு செய்யப்பட்ட தொகையை தலைவா் பதவி வகித்த சுப்பிரமணியன் சுவாமி வழங்க வேண்டும் என்று நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில், முதலீட்டாளா்களின் பணத்தை சுப்பிரமணியன் சுவாமிதான் வழங்க வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிஆணையை 1996, ஏப்ரல் 24-இல் நுகா்வோா் நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த வழக்கில் தன்னை ஒரு பிரதிவாதியாக சோ்க்காமலேயே தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கேரள உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி பி.வி. உன்னி கிருஷ்ணன் நுகா்வோா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.