தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நவாப் மாலிக்கின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது: சஞ்சய் ரௌத்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 4:36 pm

DIN


அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிம் பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவரை மார்ச் 3-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், "நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்" என்றார்.

இந்த நிலையில், நவாப் மாலிக் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது என சஞ்சய் ரௌத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணியுடன் நேருக்கு நேர் மோத முடியாததால், அப்சல் கானைப் போல பின்னாடியிருந்து தாக்குகின்றனர். நவாப் மாலிக்கின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது. நாங்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு வெற்றி பெறுவோம். கன்சாவும், ராவணனும் கொல்லப்பட்டனர். இது ஹிந்துத்வா. போர் தொடங்கியே உள்ளது. ஜெய் மகாராஷ்டிரா."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.