'தேர்தலில் பாஜக முந்தைய சாதனைகளை முறியடிக்கும்' - உ.பி. துணை முதல்வர்

உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா லக்னெள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 
லக்னெளவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்திய துணை முதல்வர் தினேஷ் சர்மா 
லக்னெளவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்திய துணை முதல்வர் தினேஷ் சர்மா 

உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா லக்னெள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகின்றது.

காங்கிரஸின் கோட்டையாக அறியப்படும் ரே பரேலி தொகுதி, லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 59 தொகுதிகளில் உள்ள 24,643 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 624 வேட்பாளா்கள் போட்டியிடும் இத்தொகுதிகளில் 2.13 கோடி வாக்காளர்கள் வாக்கு செலுத்துகின்றனர். 

இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துகின்றனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா லக்னெள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' 4-வது கட்ட தேர்தலுக்குப் பிறகு, பாஜக இரட்டை சதம் அடிக்கும், அதன் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் முன்னேறும். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்த வளர்ச்சிப் பணிகள் அனைவரின் வீட்டையும் சென்றடைந்துள்ளன' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com