உக்ரைன் மீது ரஷியா போர்: இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்துள்ளன. 
உக்ரைன் மீது ரஷியா போர்:  இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு

புது தில்லி : உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்துள்ளன. முதலீட்டாளர்களின் சொத்து வியாழக்கிழமை ஒரு மணி நேர வர்த்தகத்தில் ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், காலை வர்த்தகம் தொடங்கியதும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,3656 புள்ளிகள் சரிந்து 55,865 புள்ளிகளில் வணிகமானது.

பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.2,47,46,960 ஆக சரிந்தது.

புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பின் சந்தை மூலதனம் ரூ.2,55,68,668 ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com