ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் காலமானார்

காங்கிரஸ் தலைவரும் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் நேற்று காலமானார். 

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 11:32 am

DIN

காங்கிரஸ் தலைவரும் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் நேற்று காலமானார். 

உடல்நலக்குறைவு காரணமாக ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் ஹேமானந்த கடந்த 8ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் காலமானார். 

அவருக்கு வயது 82. மறைந்த பிஸ்வால் இரண்டு முறை முதல்வராகவும், ஒரு முறை துணை முதல்வராகவும் பதவிவகித்திருக்கிறார். மேலும் எம்பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ஒடிசாவின் முதல் பழங்குடியின முதல்வர் இவர்தான்.

ஹேமானந்த பிஸ்வால் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.