தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மும்பை விமான நிலையத்தில் ரூ.56 கோடி ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைது

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.56 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹெராயின் கடத்தியதாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 9:59 am

DIN

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.56 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹெராயின் கடத்தியதாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரி கூறுகையில், 

மும்பை விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்க பயணி ஒருவரிடம் சோதனை நடத்துகையில், அவரிடமிருந்து 8 கிலோ வெள்ளை நிற பவுடர் கைப்பற்றப்பட்டது. பின்னர், அதைச் சோதனை செய்து பார்த்தபோது, ரூ.56 கோடி மதிப்புள்ள ஹெராயின் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டட நபர் என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 8 விதிகளை மீறியதாகவும், பிரிவு 21, பிரிவு 23 மற்றும் பிரிவு 29இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் மேலதிக விசாரணைக்கு அவசியமில்லை என சுங்க அதிகாரி தெரிவித்தார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.