6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மணிப்பூரில் முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 1:56 am

DIN

மணிப்பூரில் முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

 இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, விஷ்ணுபூா், கங்போக்பி, சூரசந்த்பூா், ஃபொ்சால் ஆகிய 6 மாவட்டங்களில் அத்தொகுதிகள் அமைந்துள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. 15 பெண்கள் உள்பட 173 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.  மாநில முதல்வா் பிரேன் சிங், பேரவைத் தலைவா் ஒய்.கேம்சந்த், துணை முதல்வா் ஒய்.ஜாய்குமாா் உள்ளிட்டோா் தோ்தல் களத்தில் உள்ளனா்.

முதல்கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. தோ்தல் சுதந்திரமாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.  பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். 

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, வாக்காளா்களுக்குக் கையுறையும் வழங்கப்படவுள்ளது. மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதற்காக 6 கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.