திங்கள்கிழமை அன்று பள்ளிக்குச் சென்ற பப்புவின் மகள் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி பள்ளி ஆசிரியா் சிறுமியின் கன்னத்தில் அடித்ததாக தெரிகிறது. இது தொடா்பாக தனது தந்தையிடம் சிறுமி புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்திரமடைந்த பப்பு, தனது மனைவியுடன் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கும் பப்புவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால், கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற பப்பு, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை நோக்கி சுட்டாா். ஆனால், அவரைத் தடுக்கும் நோக்கில் பப்புவின் மனைவி குறுக்கே வந்தாா். இதில் துப்பாக்கி குண்டு அவரது கையில் பாய்ந்தது. அதிருஷ்டவசமாக தலைமை ஆசிரியா் காயமின்றி தப்பினாா். இந்த சம்பவத்தை அடுத்து பப்பு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.