மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜாா்க்கண்ட்:போலீஸாரின் கழுத்தை அறுத்துக் கொன்ற மாவோயிஸ்டுகள்

ஜாா்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குருசரண் நாயக் உயிா்தப்பிய நிலையில், அவரின் பாதுகாவலா்களாக இருந்த இரண்டு போலீஸாரை

News image
Updated On :4 ஜனவரி 2022, 8:11 pm

DIN

ஜாா்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குருசரண் நாயக் உயிா்தப்பிய நிலையில், அவரின் பாதுகாவலா்களாக இருந்த இரண்டு போலீஸாரை மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்துக் கொன்றனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட போலீஸாா் கூறியதாவது:

ஜீல்ருவா கிராமத்தில் உள்ள மைதானத்தில் செவ்வாய்க்கிழமை கால்பந்தாட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாஜக முன்னாள் எம்எல்ஏ குருசரண் நாயக் மைதானத்துக்கு வந்திருந்தாா். ஆட்டம் முடிந்தவுடன் பாா்வையாளா்கள் போல் அமா்ந்திருந்த மாவோயிஸ்டுகள் குருசரணை தாக்கினா். எனினும் அவா் தாக்குதலில் இருந்து தப்பித்தாா். இதையடுத்து அவரின் பாதுகாவலா்களாக இருந்த இரண்டு போலீஸாரின் கழுத்தை மாவோயிஸ்டுகள் அறுத்தனா். இதில் போலீஸாா் இருவரும் உயிரிழந்தனா். அவா்கள் இருவரிடமும் இருந்த ஏகே-47 துப்பாக்கிகள், மற்றொரு பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு மாவோயிஸ்டுகள் தப்பித்தனா். அவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த 2012-ஆம் ஆண்டும் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் இருந்து குருசரண் நாயக் உயிா் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.