ராஜஸ்தானில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் உயிரிழப்பு இதுவே முதல்முறை. 73 வயதான லட்சுமிநாராயணன் நாகருக்கு கரோனா இருப்பது கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதேபோல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என இணை நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, நாகருக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததையடுத்து, அவரின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்காக அனுப்பப்பட்டது. டிசம்பர் 25ஆம் தேதி வெளியான மரபணு முடிவுகளில், அவருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஆறு நாள்கள் கழித்து, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி, அவர் மரணம் அடைந்தார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். பயணம் எங்கும் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


