மும்பையில் 24 மணி நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு கரோனா
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 15,166 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 15,166 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை கரோனா பாதிப்பு தரவுகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. புதிதாக 15,166 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,33,628 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 16,384 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 714 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,52,726 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | ஒமைக்ரான் காரணமாக இந்தியாவில் முதல் பலி
மாநகராட்சி தகவலின்படி, 1,128 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 80 பேர் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொத்தமுள்ள 30,565 படுக்கைகளில், 5,104 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். மொத்த படுக்கை வசதிகளில் 14.4 சதவிகித படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த 31,182 பேரை மும்பை மாநகராட்சி கண்டறிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...