மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் மேயர் பதவியை பிடித்த பாஜக

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஜனவரி 2022, 11:44 am

பாஜக நகராட்சி கவுன்சிலர் சரப்ஜித் கவுர், ஆம் ஆத்மி கட்சியின் அஞ்சு கத்யாலை ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, சண்டிகர் மாநகராட்சியின் மேயராகியுள்ளார்.

ஏழு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள், ஒரு சிரோமணி அகாலி தள கவுன்சிலர் ஆகியோர் வாக்கு செலுத்தவில்லை. இந்நிலையில், சரப்ஜித் கவுர் 14 வாக்குகளையும் கத்யால் 13 வாக்குகளையும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டனர். 

சண்டிகர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் டிசம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், ஆம் ஆத்மி 14 வார்டுகளையும் பாஜக 12 வார்டுகளையும் கைப்பற்றின. 

காங்கிரஸ் எட்டு வார்டுகளிலும் சிரோமணி அகாலி தளம் ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கவுன்சிலர் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா பாஜகவில் இணைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.