நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தில்லியில் 300 காவலர்களுக்கு கரோனா

தில்லியில் 300 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2022, 5:38 am

DIN

தில்லியில் 300 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட கரோனா தொற்று பாதிப்பு நிலவரப்படி, புதிதாக 22,751 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,49,730 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை தில்லியில் கரோனாவால் 25160 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 60,733 பேர் தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தில்லியில் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உள்பட 300 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த தகவலை தில்லி காவல்துறை உறுதி படுத்தியுள்ளது. கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் தில்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.