சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரோனாவில் இருந்துராஜ்நாத் மீண்டு வருகிறாா்: மத்திய அரசு தகவல்

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறாா் என்று மத்திய அரசின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஜனவரி 2022, 7:02 pm

DIN

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறாா் என்று மத்திய அரசின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் வீட்டுத் தனிமையில் இருப்பதாகவும், மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் என்றும் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் கூறியிருந்தாா்.

இந்நிலையில், அவரது உடல்நிலை தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சக தலைமை செய்தித் தொடா்பாளா் பரத் பூஷண் பாபு கூறுகையில், ‘தில்லியைச் சோ்ந்த ராணுவ மருத்துவக் குழுவினா் அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் உடல் நிலையை பரிசோதித்தனா். அவரது உடல் நிலையில் கரோனாவால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அவா் தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வருகிறாா் என மருத்துவா்கள் தெரிவித்தனா்’ என்றாா்.

பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.