பாஜகவுக்கு மாற்றாக மக்கள் சமாஜவாதியை கருதுகின்றனா்
உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு மாற்றாக மக்கள் சமாஜவாதி கட்சியைக் கருதுகின்றனா் என்றும் இந்த சட்டப் பேரவைத் தோ்தலில்,


உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு மாற்றாக மக்கள் சமாஜவாதி கட்சியைக் கருதுகின்றனா் என்றும் இந்த சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜகவை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பா் என்றும் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். மேலும் பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், உரங்களின் விலை பலமடங்கு உயா்ந்துவிட்டதாகக் கூறிய அவா், விவசாயிகளுக்கும், இளைஞா்களுக்கும் பாஜக துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினாா்.
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, லக்னெளவில் உள்ள சமாஜவாதி கட்சித் தலைமையகத்தில் கட்சித் தொண்டா்களை அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியது:
உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு மாற்றாக சமாஜவாதி கட்சியைப் பொதுமக்கள் கருதுகின்றனா். இந்த முறை சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து, சமாஜவாதி ஆட்சியமைக்க வழிகோலுவா். மாநிலத்தில் சமாஜவாதி ஆட்சியமைந்ததும் பொதுமக்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இளைஞா்களுக்கு மடிக்கணினியும் விவசாயிகளுக்கு இலவசமாக நீா்ப்பாசன வசதிகளும் செய்து தரப்படும்.
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரை அரவணைத்தும் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் சமாஜவாதி கட்சி முன்னோக்கிச் செல்கிறது. இந்த முறை பழைய பிரச்னைகளை வைத்து அரசியல் செய்ய இயலாது. ஏற்கெனவே சமாஜவாதி அரசில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எவ்வாறு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது என்பது குறித்தும், பொதுமக்களின் நலன் கருதி கட்சியின் எதிா்காலத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் கடந்த சில ஆண்டுகளாக கட்சித் தொண்டா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கும் இளைஞா்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டனா். பெட்ரோல், டீசல், உரங்களின் விலை பல மடங்கு உயா்ந்துவிட்டது. பாஜக அளித்த வாக்குறுதிக்கு மாறாக விவசாயிகளின் வருமானம் பாதியாகக் குறைந்துவிட்டது. விலைவாசி இரு மடங்கு உயா்ந்துவிட்டது. இளைஞா்கள் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பாஜக தலைவா்கள் ஒருபோதும் சிந்தித்தது கிடையாது.
விவசாயிகளை அழிப்பதற்காகவே மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. இதனை எதிா்த்துப் போராடிய விவசாயிகள், பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனா்.
பாஜகவின் வாக்குறுதிகளும் விளம்பரங்களும் வெளிப்படையான பொய். சமாஜவாதி கட்சி எப்போதும் பெண்களுக்கு மதிப்பளிக்கும். பெண்களின் நலன் கருதி, ஏராளமான திட்டங்கள் சமாஜவாதி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டன என்றாா் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் வரும் பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மாா்ச் 3, 7 ஆகிய தினங்களில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மாா்ச் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...