47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பஞ்சாப் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாஜக கடிதம்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி பாஜக மாநில பொதுச்செயலாளர் சுபாஷ் சர்மா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 2:48 pm

DIN


பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி பாஜக மாநில பொதுச்செயலாளர் சுபாஷ் சர்மா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறுகிறது. குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பஞ்சாப் பாஜக கடிதம் எழுதியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் சுபாஷ் சர்மா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குரு ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 16-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

பஞ்சாப் மக்கள்தொகையில் 32 சதவிகிதம் இருக்கும் பட்டியலினத்தவர்கள் உள்பட குரு ரவிதாஸைப் பின்பற்றுபவர்கள் மாநிலத்தில் கணிசமாக உள்ளனர். குரு ரவிதாஸ் ஜெயந்தியைக் கொண்டாடும் விதமாக லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள பனாரஸ் செல்வார்கள்.

இந்த வாக்காளர்களும் தேர்தல் நடைமுறையில் கலந்துகொள்ளும் வகையில், வாக்குப் பதிவு தேதியை ஒத்திவைக்கக்கோரி கேட்டுக்கொள்கிறோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.