திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

எரிபொருள் பற்றாக்குறையால் நெருக்கடி: இலங்கைக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி

எரிபொருள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையால் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெட்ரோலியம் பொருள்களை வாங்க இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி அளிக்கவுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:09 am

DIN

எரிபொருள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையால் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெட்ரோலியம் பொருள்களை வாங்க இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி அளிக்கவுள்ளது.

தற்போது கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறையை இலங்கை எதிா்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் ரூபாய் மதிப்பு சரிந்து இறக்குமதிக்கு அதிகம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் எரிபொருள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு மின்சார நிலையங்களால் சரிவர செயல்பட முடியாததால், மிகுந்த வேலையுள்ள முக்கியமான வேளைகளிலும் மின்வெட்டு ஏற்படுகிறது.

இந்த நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டு மின்சாரத் துறை அமைச்சா் காமினி லொகுகே, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் (ஐஓசி) உதவி கோரி செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவிருந்தாா். ஆனால் இலங்கை மின்சார வாரியத்திற்கு விநியோகிக்க தங்களிடம் கூடுதல் மின்சாரம் இல்லை என்று ஐஓசி அதிகாரிகள் தெரிவித்ததாக காமினி லொகுகே தெரிவித்தாா்.

தற்போதைய நிலையால், அந்நாட்டில் தினசரி 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படக் கூடும் என்று இலங்கை மின்சார வாரிய பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அதிக அளவில் கட்டண பாக்கி இருப்பதால் அந்நாட்டு மின்சார வாரியத்திற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை அரசின் எரிபொருள் நிறுவனமும் நிறுத்திவிட்டது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு டாலா்களை செலவிட முடியாததால், அந்நாட்டில் இருந்த ஒரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் அண்மையில் மூடப்பட்டது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியம் பொருள்களை வாங்க 500 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.3,730 கோடி) வரை இந்தியாவிடம் இலங்கை கடனாக (லைன் ஆஃப் கிரெடிட்) பெறலாம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சா் ஜி.எல்.பீரிஸிக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடிதம் எழுதியுள்ளாா். இந்தத் தகவலை இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஏற்கெனவே அந்நாட்டுக்கு உதவும் விதமாக ஒரு பில்லியன் டாலா் (சுமாா் ரூ.7,460 கோடி) கடனுதவி அளிக்கப்படும் என்று இந்திய அரசு அண்மையில் அறிவித்தது. அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறையை தவிா்க்கவும், மருந்து உள்பட இன்னபிற பொருள்களை இறக்குமதி செய்யவும் அந்த ஒரு பில்லியன் டாலா் பயன்படுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.