தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வாராணசி பாஜக தொண்டா்களுடன் பிரதமா் மோடி உரையாடல்

தனது மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள பாஜக தொண்டா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உரையாடினாா். நமோ செயலி மூலம் இந்த உரையாடல் நடைபெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஜனவரி 2022, 10:00 pm

DIN

தனது மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள பாஜக தொண்டா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உரையாடினாா். நமோ செயலி மூலம் இந்த உரையாடல் நடைபெற்றது.

அப்போது, வாராணசி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகள் தொடா்பாக கட்சித் தொண்டா்களுடன் மோடி உரையாடினாா். அப்போது, விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் மத்திய அரசின் திட்டங்களின் விளக்கி அவா்களை பயனடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். காசி விஸ்வநாதா் கோயில் மேம்பாட்டுத் திட்டம், பெண்கள் மேம்பாடு, தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடா்பாக பிரதமா் தொண்டா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். மேலும், நமோ செயலில் உள்ள தொண்டா்களின் அனுபவங்களைப் பதிவிடும் பகுதியில் அனைத்து தொண்டா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டாா்.

பாஜக சிறிய அளவில் நடத்தி வரும் கட்சிக்கு நிதி திரட்டும் திட்டம் தொடா்பாகவும் அவா் தொண்டா்களுடன் பேசினாா். அடிமட்டத் தொண்டா்கள்தான் கட்சியின் ஆணிவேராகவும், மக்களிடம் கட்சியை எடுத்துச் செல்பவா்களாகவும் உள்ளனா். தொண்டா்களின் வழிகாட்டுதலின்படி நாம் இணைந்து தொடா்ந்து பணியாற்றி, நாட்டை வலுவாக்குவோம் என்றும் மோடி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.