மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சர்வதேச விமான சேவைக்கான தடை பிப். 28 வரை நீட்டிப்பு: மத்திய அரசு

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

News image
சர்வதேச விமான சேவைக்கான தடை பிப். 28 வரை நீட்டிப்பு
Updated On :19 ஜனவரி 2022, 7:23 am

DIN

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ஒமைக்ரான் கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு ஒத்திவைத்து ஜனவரி 2022 வரை தடை நீடிக்கும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில்,

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை 2022 பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு 11.59 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் விமான கட்டுப்பாட்டரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.