பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜன.19) காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.