காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மகாராஷ்டிரத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜன. 24 முதல் பள்ளிகள் திறப்பு

மகாராஷ்டிரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 24 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
மகாராஷ்டிரத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜன. 24 முதல் பள்ளிகள் திறப்பு
Updated On :20 ஜனவரி 2022, 8:35 am

DIN

மகாராஷ்டிரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 24 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா வகை பரவலையடுத்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 24ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க நாங்கள் வைத்த கோரிக்கைக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளதாக வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனவரி 24 முதல் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.