மூன்றாவது அலையில் பலி எண்ணிக்கை குறைவு: மத்திய அரசு
கரோனா இரண்டாவது அலையைக் காட்டிலும், மூன்றாவது அலையில் பலி எண்ணிக்கைகள் குறிப்பிட்டத்தக்க அளவில் குறைவாக உள்ளதாக மத்திய அரசு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தது.


கரோனா இரண்டாவது அலையைக் காட்டிலும், மூன்றாவது அலையில் பலி எண்ணிக்கைகள் குறிப்பிட்டத்தக்க அளவில் குறைவாக உள்ளதாக மத்திய அரசு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தது.
கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
அப்போது மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தது:
"உலகளாவிய கரோனா பாதிப்பில் ஆசியாவின் பங்களிப்பு 4 வாரங்களில் 7.9 சதவிகிதத்திலிருந்து 18.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன.
நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிசா, தில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் அதிகம் உள்ளனர்.
இதையும் படிக்க | உடையை வைத்து அரசியல்; பாஜக அமைச்சருக்கு பதிலடி கொடுத்த மாணவிகள்
கடந்த ஏப்ரல் 30, 2021-இல் 3,86,452 புதிய பாதிப்புகளும், 3,059 உயிரிழப்புகளும் பதிவாகின. 31 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். ஜனவரி 20,2022-இல் 3,17,532 புதிய பாதிப்புகளும், 380 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. 19,24,051 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் ஜனவரி 9 முதல் ஜனவரி 19 வரை சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரம் வரை இருந்தது. ஆனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 2,500-இல் இருந்து 2,600 பேர் மட்டும். 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவிகிதத்தினருக்கு பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், நடுக்கம், இருமல் மட்டுமே இருந்தன. இந்த அறிகுறிகள் 5-வது நாளில் குணமடைந்துவிடுகின்றன.
இதுவரை மொத்தம் 72 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். 15-18 வயதுடைய சிறார்கள் 52 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது."
ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியதாவது:
"இந்தியாவில் தடுப்பூசிகள் பலனளிக்கின்றன. தடுப்பூசி காரணமாக பலி எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. தடுப்பூசி அதிகம் செலுத்திக்கொண்டதால், கரோனா மூன்றாம் அலையில் தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் நாம் பார்க்கவில்லை" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...