உடையை வைத்து அரசியல்; பாஜக அமைச்சருக்கு பதிலடி கொடுத்த மாணவிகள்
உடை வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் இல்லையென்றால் வீடுகளிலேயே இருந்து கொள்ளலாம் என மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரிகள் தடை விதித்துவருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ , மாணவியர் சிலர் காவி உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
அதேபோல, உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இன்று காலை இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
உடை வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் இல்லையென்றால் வீடுகளிலேயே இருந்து கொள்ளலாம் என மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்த மறுநாளே மாணவிகள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறுகையில், "இது ஒழுங்கீனமான நடவடிக்கை. பள்ளிகளும் கல்லூரிகளும் மத தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கு இடம் இல்லை. அடுத்த ஆண்டு கர்நாடக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிலர் அதை அரசியலாக்க முயல்கின்றனர்.
இந்தச் சட்டம் 1958 முதலே கர்நாடகாவில் நடைமுறையில் உள்ளது. இதை எதோ நாங்கள் கொண்டு வந்ததைப் போல கூறாவது தவறு. அந்த குறிப்பிட்ட அரசு கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவிகள் படித்து வருகின்றனர். மற்ற அனைவரும் உடை கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுகின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட சில மாணவிகள் மட்டும் ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை அனைத்து மாணவிகளும் உடை கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றி வந்தனர். ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் மட்டும் போராட்டம் நடத்துவது ஏன்? இதுபோன்ற ஒழுங்கீனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது" என்றார்.
இதையும் படிக்க | காஷ்மீா் பத்திரிகையாளா் மன்றத்தின் இடத்தை திரும்பப் பெற்றது அரசு
இது குறித்துப் போராடும் மாணவிகளில் ஒருவர் கூறுகையில், "எங்கள் பெற்றோர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் கல்லூரி நிர்வாகம் இதை ஏற்க மறுக்கிறது. இது பெண்கள் கல்லூரி, ஆனால் எங்களுக்கு ஆண் பேராசிரியர்கள் தான் வருகிறார்கள். இதனால் எங்களால் செளகரியமாக உணர முடியவில்லை.
எங்கள் கல்லூரியில் பெண் பேராசிரியர்கள் மட்டும் இருந்தால் ஹிஜாப் அணியாமல் இருப்பதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை" என்றார்.
அதேபோல மற்றொரு மாணவி, "மாநிலத்தில் உடைகளுக்கு எனத் தனிக் கட்டுப்பாடுகள் இல்லை. கல்லூரி நிர்வாகம் தங்கள் மன ரீதியாகச் சித்திரவதை செய்கிறது" என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...