ஆம் ஆத்மியில் போட்டியிட பாஜகவின் உத்பல் பாரிக்கருக்கு கேஜரிவால் அழைப்பு!

கோவா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களில் பட்டியலில் உத்பல் பாரிக்கரின் பெயர் இடம்பெறாததை அடுத்து, ஆம் ஆத்மியில் போட்டியிட கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 
உத்பல் பாரிக்கர்
உத்பல் பாரிக்கர்

கோவா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களில் பட்டியலில் உத்பல் பாரிக்கரின் பெயர் இடம்பெறாததை அடுத்து, ஆம் ஆத்மியில் போட்டியிட கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் ஒன்றான கோவாவில் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

கோவாவில் பாஜக ஆட்சி உள்ள நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் கோவாவில் ஆட்சியைப் பிடிக்க முனைப்பில் உள்ளன. 

இந்நிலையில், கோவாவில் 34 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில், கோவா முன்னாள் முதல்வரும் மத்திய முன்னாள் அமைச்சருமான மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கரின் பெயர் இடம்பெறவில்லை. மனோகர் பாரிக்கர் போட்டியிட்ட பனாஜி தொகுதியில் உத்பல் பாரிக்கர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், 'பாஜக 'யூஸ் அண்ட் த்ரோ' கொள்கையை மனோகர் பாரிக்கரின் குடும்பத்துடனும் பின்பற்றியதற்காக கோவா மக்கள் வருத்தப்படுகிறார்கள். நான் மனோகர் பாரிக்கரை மிகவும் மதிக்கிறேன். ஆம் ஆத்மி கட்சியில் இணைவதுடன் தேர்தலில் போட்டியிடவும் உத்பல் பாரிக்கரை வரவேற்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

ஆனால், பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உத்பல் வேறு தொகுதியில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com