கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிகாரில் இரவு நேர ஊரடங்கு பிப். 6 வரை நீட்டிப்பு

பிகார் மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜனவரி 2022, 3:55 pm

DIN

பிகார் மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பிகாரில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்று பரவல் சூழல் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பிகாரில் அமலில் உள்ள கரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 3,475 பேர் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 26,673 பேர் மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.