தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாயாவதிக்கும் அகிலேஷ் யாதவிற்கும் சவால் விடுகிறேன்: அமித் ஷா

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சியை புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயாராக உள்ளார்களா என மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவிற்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

News image
அமித் ஷா
Updated On :22 ஜனவரி 2022, 2:58 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சியை புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயாராக உள்ளார்களா என மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவிற்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘ இன்று என்னிடம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளின் அறிக்கை இருக்கிறது. இதில் 2016ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 70% மோசடி, 69% கொள்ளை, 32% கொலை, 86% கலவரம், 22% வரதட்சணை மரணம், 52% பலாத்கார வழக்குகள் குறைந்துள்ளன. மாயாவதிக்கும் , அகிலேஷ் யாதவிற்கும் நேரடியாக சவால் விடுக்கிறேன். இந்தப் புள்ளி விவரங்களுடன் என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.