ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உ.பி.: 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மாயாவதி

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை அக்கட்சியின் தலைவா் மாயாவதி வெளியிட்டார்.

News image

உ.பி.: 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மாயாவதி

Updated On :22 ஜனவரி 2022, 12:15 pm

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை அக்கட்சியின் தலைவா் மாயாவதி வெளியிட்டார்.

வேட்பாளர் பட்டியல் குறித்து கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், 23 பேர் முஸ்லிம்கள் என்றும், 10 பேர் பட்டியலினத்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 55  தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிஜ்னோர், மொராதாபாத், சம்பல், ராம்பூர், படௌன், பரேலி, ஷாஜஹான்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் 7 கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக-சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ளன. இதில் பாஜகவுக்கும், சமாஜவாதிக்கும் இடையில்தான் கடும் போட்டி இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை மாநிலத்தில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் கட்டாயத்தில் இந்த தோ்தலைச் சந்திக்கின்றன.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளா் எஸ்.சி.மிஸ்ரா லக்னௌவில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட மாட்டாா். அதே நேரத்தில் கட்சியின் பிற வேட்பாளா்களின் வெற்றிக்காக அவா் பாடுபடுவாா் என்றாா்.

மாயாவதி இப்போது எம்.பி.யாகவோ அல்லது எம்எல்ஏவாகவோ இல்லை. இந்த நிலையில் அவா் தோ்தலில் போட்டியிடாதற்கான உரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சமாஜவாதி கட்சி உத்தர பிரதேசத்தின் அனைத்து 403 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

64 வயதாகும் மாயாவதி உத்தர பிரதேச முதல்வராக வெவ்வேறு காலகட்டங்களில் 4 முறை பதவி வகித்துள்ளாா். இதில் ஒருமுறை மட்டுமே தனிப்பெரும்பான்மையுடன் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்தாா். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த முதல் பெண் முதல்வா் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.