மகாராஷ்டிரத்தில் சாலை விபத்து: 5 பேர் பலி, 5 பேர் காயம்
மகாராஷ்டிரத்தின் புணே-அகமத்நகர் சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.


மகாராஷ்டிரத்தின் புணே-அகமத்நகர் சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஷிக்ராபூர் அருகே ஞாயிறு இரவு 7 மணியளவில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர் என்று புணே கிராமப்புற காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் இருசக்கர வாகனம் ஒன்றில் பயணித்த தம்பதியரும் அடங்குவர். காரில் 6 பேர் இருந்தனர், அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது கார் மோதியதில் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கவால்துறையினர் தெரிவித்தனர்.
லாரி வேகமாக ஒட்டி வந்ததையடுத்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...