மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாஜக எம்எல்ஏ மகன் உள்பட7 மருத்துவ மாணவா்கள் சாலை விபத்தில் பலி

மகாராஷ்டிரத்தில் பாஜக எம்எல்ஏவின் மகன் உள்பட 7 மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனா்.

News image
Updated On :25 ஜனவரி 2022, 7:14 pm

DIN

மகாராஷ்டிரத்தில் பாஜக எம்எல்ஏவின் மகன் உள்பட 7 மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனா்.

நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு 1.30 மணியளவில் அவா்கள் ஒரே காரில் பயணித்தனா். வாா்தா மாவட்டம் சில்சுரா கிராமம் அருகே அந்த காா் பாலம் ஒன்றை கடந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி உடைத்துக் கீழே பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 7 மாணவா்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அந்த காரை மாணவா்களில் ஒருவா்தான் ஓட்டி வந்துள்ளாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இதில் உயிரிழந்த மாணவா் ஆவிஷ்காா் ரஹாங்கதலேவின் தந்தை விஜய் ரஹாங்கதலே பாஜக எம்எல்ஏவாக உள்ளாா். ஆவிஷ்காா் வாா்தாவில் உள்ள ஜவாஹா்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். விபத்தில் உயிரிழந்த மற்றவா்களும் அதே கல்லூரியில்தான் படித்து வந்தனா். சக மாணவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவு நேரத்தில் திரும்பியபோது அதிவேகமாக காரைச் செலுத்தியதால், காா் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், இந்த மோசமான விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் தேசிய நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.