பேருந்துப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: குருகிராமில் புதிய வசதி

பேருந்து நிலையங்களில் ஒளிர் திரைகளில் வெளியிடும் புதிய திட்டம் குருகிராமில் அறிமுகமாக உள்ளது.
பேருந்துப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: குருகிராமில் புதிய வசதி
பேருந்துப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: குருகிராமில் புதிய வசதி
Updated on
1 min read


குருகிராம்: ரயில் இத்தனை மணிக்கு இந்த நடைமேடைக்கு வந்து சேரும் என்ற அறிவிப்பைப் போல, இந்தப் பேருந்து இத்தனை மணிக்கு இந்த பேருந்து நிறுத்தத்துக்கு வந்தடையும் என்ற தகவலை, பேருந்து நிலையங்களில் ஒளிர் திரைகளில் வெளியிடும் புதிய திட்டம் குருகிராமில் அறிமுகமாக உள்ளது.

குருகிராமில் பேருந்துகள் நிறுத்தத்தில், இந்த வசதி உருவாக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, பொதுப் போக்குவரத்தில் 100 சிறிய பேருந்துகளின் நேரங்கள் இந்த ஒளிரும் எண்ம பலகையில் வெளியிடப்பட உள்ளது.

குருகிராமில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்  மூல்சந்த் ஷர்மா அறிவித்தார்.

விரைவில், இது மெட்ரோ பகுதியிலிருந்து குருகிராமுக்கு வரும் பேருந்துகளின் சேவைக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக எண்ம பலகைகள் விரைவில் பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com