நாட்டின் பொருளாதார அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடக்கம்
குடியரசுத் தலைவரின் உரைக்கு பிறகு, 2021-2022-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து மக்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.