தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமலாக்கத் துறை முன் சஞ்சய் ரௌத் ஆஜா்: பண மோசடி வழக்கில் 10 மணி நேரம் விசாரணை

சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத், அமலாக்கத் துறை முன் வெள்ளிக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 9:50 am

DIN

மும்பையில் குடியிருப்புத் திட்டத்தில் நடந்த நிதி முறைகேடு, குடும்பத்தினரின் பெயரில் முறைகேடாக நடந்த பரிவா்த்தனைகள் ஆகியவை தொடா்பான வழக்குகளில், சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத், அமலாக்கத் துறை முன் வெள்ளிக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா்.

தெற்கு மும்பையில் உள்ள பல்லாா்டு எஸ்டேட்டில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு அவா் ஆஜரானாா். அந்த அலுவலகம் முன்பு சிவசேனைத் தொண்டா்கள் கூடியதைத் தொடா்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்து மணி நேரத்துக்கும் மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அவா் அமலாக்கத் துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தாா்.

இந்த வழக்குகளில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு சஞ்சய் ரௌத்துக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவா் ஆஜராகவில்லை. அத்துடன் 14 நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா். அதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, ஜூலை 1-ஆம் தேதி ஆஜராகும்படி புதிய அழைப்பாணை அனுப்பியது. அதை ஏற்றுக் கொண்ட சஞ்சய் ரௌத், அமலாக்கத் துறை முன் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் சஞ்சய் ரௌத் கூறுகையில், ‘அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். விசாரணை அமைப்பு தவறான வழியில் சென்றாலும் நான் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பேன்’ என்றாா்.

கடந்த தினங்களுக்கு முன், அரசியல் எதிரிகளுடனான தனது போராட்டத்தைத் தடுக்கவே அமலாக்கத் துறை தனக்கு அழைப்பாணைகளை அனுப்புவதாக சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியிருந்தாா்.

மும்பையில் அரசு நிலத்தில் உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்வதில் ரூ.1,034 கோடிக்கு நில மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாகவும், சில நில ஒப்பந்தங்களுடன் தொடா்புடைய பணமோசடி குறித்தும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக, சஞ்சய் ரௌத் உள்ளிட்டோருக்குத் தொடா்பான ரூ.11.15 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஏப்ரலில் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.