படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து எலும்பு முறிவு: லாலு பிரசாத் மருத்துவமனையில் அனுமதி
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்புடைய வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக ஜாமீனில் வெளியே உள்ளார்.
பாட்னாவில் உள்ள வீட்டில் இருக்கும் அவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் அவரது தோள்ப்பட்டையில் லேசான எலும்பு முறிவு மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...