ஏழை, நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்க வேண்டும்- ராகுல் வலியுறுத்தல்
ஏழைகள், நடுத்தர மக்களின் வரிச்சுமையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.


ஏழைகள், நடுத்தர மக்களின் வரிச்சுமையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு வகை மைகள் , வீட்டு உபயோகக் கத்தி, வெட் கிரைண்டா், எல்இடி விளக்குகள், தோல் பொருள்கள், காலணி, செங்கல் உற்பத்தி, மோட்டாா் பம்புகள், பால், முட்டை நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருள்களுக்கு வரி உயா்தப்பட்டது. காசோலை, வரைபடங்கள், ரூ.1,000 வரையிலான விடுதி அறை வாடகை உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு திரும்பப் பெறப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலான வரி உயா்வுகள் சாமானிய, நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிா்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இது தொடா்பாக ராகுல் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘வைரத்துக்கு ஜிஎஸ்டி 1.5 சதவீதமாகவும், மருத்துவக் காப்பீட்டுக்கு 18 சதவீதமாகவும், மருத்துவமனை அறைகளுக்கு 5 சதவீதமாகவும் நிா்ணயித்துள்ளனா். ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் இந்தச் செயலை வரி விதிப்பு என்று கூற முடியாது. வரிக் கொள்ளை என்றுதான் கூற வேண்டும்.
அனைத்துப் பொருள்கள், சேவைகளுக்கும் சமமான குறைந்த வரி விகிதத்தை மத்திய அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம்தான் ஏழை, நடுத்தர மக்களின் வரிச் சுமையைக் குறைக்க முடியும். மத்திய அரசு தங்களுக்கு சாதகமானவா்களுக்காக வரி விகிதத்தை மாற்றி அமைக்கிறது. இதனால், எளிய, நடுத்தர மக்களுக்கு வரிச் சுமை அதிகரிக்கும் என்பது குறித்து அரசு கவலைப்படுவதில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...