தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உ.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டுத் தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 ஜூலை 2022, 7:08 am

உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இறந்தவர்கள் சோனு, அவரது மனைவி கீதா மற்றும் எட்டு வயது மகள் ஸ்ரீஷ்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தக் குடும்பத்தின் 10 வயது மகன் ஷியாம் உயிருடன் உள்ளான். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், கீதாவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சோனு திருமணம் செய்த நிலையில், அவாஸ் விகாஸ் காலனியில் தனியாக வசித்து வந்தார். 

சுமார் 6 வருடங்களுக்கு முன்பு, சோனு ஒரு விபத்தில் சிக்கினார். பின்னர் தனது தந்தையின் தொழிலில் பணியாற்றத் தொடங்கினார். தொற்றுநோய் காலத்தில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில், அன்றிரவு தன்னுடன் இருந்த தனது பேரன் கீழே இறங்கிச் சென்ற பார்க்கையில், மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். அதிர்ந்த சோனுவின் தாயார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இந்த தற்கொலை புதிராக உள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.